Saturday, December 8, 2012

நான் மாறிட்டேனா..............


                                          நான் மாறிட்டேனா..............



பல நாட்களுக்குப் பிறகு ..................

            இணையத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி ...............

            இந்த இடைவேளையில் நான் சந்தித்த அனுபவங்கள் பல........

             திருமண வாழ்க்கையிலும் சரி.... வெளி வன வாழ்க்கையிலும் சரி......

             என்னை நானே இப்போது கேட்டுக்கொள்ள நேரம் வந்திருக்கிறது.......

             நான் மாறிவிட்டேனா...!    >..?

             இந்த கேள்வியை எப்போதாவது  நம்மை நாமே கேட்டுள்ளோமா ..?

             நம் நண்பர்கள்..., நம் வயதை ஒத்த உறவினர்கள் ... எங்கோ ஒரு நிகழ்ச்சியில் ..., சந்திப்பில் ... நம்மைப் பார்த்து " நீ ரொம்ப மாறிட்டே ..." என்று சொல்லும் நேரம் வரை நாம் அதை உணர்வதே இல்லை....! அதற்கு ஒரு மொக்கை பதிலாக "இல்லையே ... நான் அப்படியே தான் இருக்கேன் " என்று புறம் பற்றி நாசூக்காக பேசி நழுவி விடுவோம்.....

         என்றாவது யோசித்திருக்கிறோமா .... இரவில்... இப்போதிருக்கும் என்னை யும் ... முந்திய என்னைப் பற்றியும்...?

         நண்பா... மாறுவது இயல்பு தானே ... என்று நீங்கள் உரைப்பது புரிகிறது....!

         நன்மை பயக்கும் மாற்றம் ஏற்கக் கூடியது தான்....

         கோபமே படாத பொறுமைசாலி அதீத கோபமுள்ளவராகவும்...,

         எதற்கும் கலங்காத மனம் கொண்டவர், பிள்ளையின் சிறு தும்மலைக் கூட தாங்க முடியாதவராகவும் ........

        தீர யோசித்தே செயல் படக் கூடியவரின் திடீர்முடிவுகளும்....!

        பிரச்சனைகளை எதிர் நின்று சமாளிப்பவர் .., அவச் சொல்லை தாங்க ஒண்ணாது தற்கொலையை நாடுவதும்....,

       இப்படி அடுக்கிக் கொண்டே போகிற பல மாற்றங்கள் ... மனிதர் மனங்களில் மாறுகிறது ....

      அது சரி எது மாற்றுகிறது அவர்களை.....?

       மனிதனை ஒரு விசித்திர மாண்போடு இறைவன் படைத்து  விட்டான்....!

      சூழ்நிலைகளுக்குள் கரைந்து போகிற ஒரு மாண்பு....

      வாழ்நிலைகளுக்குள் வளைந்து போகிற ஒரு மாண்பு...

      தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளையும் தனக்கும் பங்கு உண்டு என்று தவித்து போகிற மாண்பு....!

     இப்போது முன்னே நான் சொன்ன அத்தனை மாண்புகளும் ... மனிதனோடு உடன் பிறப்பவைகள் அல்ல.. இவை வளர்ந்த பிறகு அவனுக்கு கற்பிக்கப் படுகிற மாண்புகள்...

    குடும்பம் சார்ந்தே இரு.... அது தான் உனக்கு அழகு... அதை மீறிச் செல்லாதே .. அது நம் குலத்துக்கே அவமானம் ... வேலை செய்யும் நேரம் அடிமையாகவே இரு... மூத்தோர் சொல்லை மதி... அவர்களின் அனுபவம் உனக்கு வழி காட்டும்... நீயாக முடிவெடுத்து முடிவில் இன்னலில் மாட்டிக்கொள்ளதே ... கேட்டு நட... மனைவியிடம் மயங்காதே என்று கணவனுக்கும்..., கணவனை விழ வைக்கும்  தலையணை மந்திரம் மனைவிக்கும் ... காலம் காலமாக பயிற்றுவிக்கப்  படுகிறது... எதனால் .... இந்த சமுதாயத்தால்.....!

   நம் அம்மாவிற்கு அவர்கள் அம்மா... அவர்களுக்கு அவர்கள் அம்மா... அது தொடர்கிறது நமக்கும்....!

  சரி ... நான் இந்த சூழ்நிலையில்  இருந்து எப்படி வெளியே வருவது....? கேள்வி எழுகிறது....!

இதற்கு ஒரே பதில்.....!
.
.
.
.
..
.
.
.
.

.
.
.
கட்டாயம் .... மிகக் கட்டாயமாக ... உண்மையாக இந்த சூழலில் இருந்து நம்மால் வரவே முடியாது.....
.
.
.
.
அப்படி என்றால் என்னால் இதிலிருந்து தப்பித்து என்னை நானே தற்காத்துக் கொள்ள வழி...?
.
.
.
ஒன்று உள்ளது....!
.
.
.
சாலையில் ஒரு விபத்து... ஒரு ஆர்வ மிகுதியில் கொஞ்சம் எட்டிப் பார்த்து கொஞ்சம் உச்ச் கொட்டிவிட்டு... நம் அடுத்த வேலைக்கு செல்ல தயார் ஆவோமே...!

அதை ஏன் நம் வாழ்வில் நமக்கு வரும் பிரச்சனைகளில் பிரயோகப் படுத்தி பார்க்கக் கூடாது....!

ஒரு பிரச்சனை நம்மை அண்டும்  போது ... ஒரு பரிதாபப் பார்வையோடு... "அடடே ... வந்து விட்டாயா....! நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று அலட்சியப் படுத்தி , அதனை ஒரு மூன்றாம் கண்ணோடு நோக்கி ... சட்டை செய்யாமல் இருந்தால்... அந்த கேள்வியில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் .

     முயற்சி செய்து பாருங்கள்... வருங்காலத்தில்... உங்களுக்கு வருகிற கவலைகள் , பிரச்சனைகள் மீது உங்களுக்கு கருணை கூட வரலாம்...!

                                                                                                இன்னும் சிந்திப்போம்....!!!!!!!!

                                                                                                             மா இ செந்தில் குமார் 

Friday, February 4, 2011

KAVITHAIGAL

உன் எதிர் வீட்டு குழந்தையாய்
நான் இருந்திருக்க கூடாதா...?
உன் எச்சில் படாத
இதழ் முத்தம் எனக்கும்
கிடைத்திருக்கும்...!
----------------------------------------------------------------
கூந்தலை ஒதுக்குவது
உனது அழகில் ஒன்று...!
அதில்...
என்னையுமா...!

KAVITHAIGAL

சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு...!

உன்னிடம் பேசவில்லையே என்று
உன்னையே நினைத்திருக்கும்
கொடுமையை விட
உன்னிடம் பேசியே இருக்கலாம்...!
---------------------------------------------------------------------------------
சுரங்கத்தில் தோண்டினால்
வைரம்
கிடைக்குமாம் .....!
என்
மன சுரங்கத்தில்
நீ..!
------------------------------------------------------------------------------

Saturday, August 7, 2010

NIMITHA ....!

நிமிதாவா...!

என்னடா இது ...! எதோ நமீதா ரசிகர் மன்றத் தலைவனின் வலைப் பின்னல் போல...!

இந்த வலைப் பின்னலின் அகர பக்கத்தை பார்ப்பவர்களின் அநேக எண்ணங்கள் இதுவாகவே இருக்கும்....! இருக்கலாம்...!

ஒரு வேலை ... இவன் காதல் தோல்வி அடைந்து அந்த பெண்ணின் நினைவால் அவள் பெயரிட்டு தொடங்கி இருப்பானோ...!

இன்னும்  எத்தனை எத்தனை கேள்விகளுக்கு எல்லாம் ...! என் வலை வார்த்தைகள் பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை ....!

ஆனால் எதாவது இருக்கும் என்ற எண்ணத்தோடு என் இணையம் வந்த இதயங்களுக்கு என் இனிய நன்றிகள்...!

நிமிதா ...!
இந்த வார்த்தை என் மனதில் பல நாட்கள் பதியம் போட்டு பழகிய வார்த்தை...!

ஒரு புத்தகம் படித்தேன்...!

அந்த புத்தகத்தை வெறுமனே நான் புரட்டவில்லை...!
அந்த  புத்தகம் தான் என்னை புரட்டி விட்டது...!

வெற்றுப் படகு...! ( AN EMPTY BOAT )
என்ற அந்த புத்தகத்தில் ஓஷோ அவர்களால்...! குறிப்பிடப்பட்ட வார்த்தை...!
நிமித்த....!

"நாம் வெறும் கருவி மட்டுமே...!
நம்மால் ஆகுவன ஏதும் இல்லை...!
நாம்  வெறும் நிமிதா மட்டுமே..!"

  என்ற அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன..!
we are just a tool only...!   The written is proceeding you and the rope is in almighty's hands...!
இந்த வார்த்தைகள் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை..!
ஆனால் குறைந்த பட்சம் உணர முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற அவா உணர்ச்சியில் உதிர்ந்த உன்னத சிந்தனை தான் நிமிதா ...!