நிமிதாவா...!
என்னடா இது ...! எதோ நமீதா ரசிகர் மன்றத் தலைவனின் வலைப் பின்னல் போல...!
இந்த வலைப் பின்னலின் அகர பக்கத்தை பார்ப்பவர்களின் அநேக எண்ணங்கள் இதுவாகவே இருக்கும்....! இருக்கலாம்...!
ஒரு வேலை ... இவன் காதல் தோல்வி அடைந்து அந்த பெண்ணின் நினைவால் அவள் பெயரிட்டு தொடங்கி இருப்பானோ...!
இன்னும் எத்தனை எத்தனை கேள்விகளுக்கு எல்லாம் ...! என் வலை வார்த்தைகள் பதில் சொல்லப் போகிறது என்று தெரியவில்லை ....!
ஆனால் எதாவது இருக்கும் என்ற எண்ணத்தோடு என் இணையம் வந்த இதயங்களுக்கு என் இனிய நன்றிகள்...!
நிமிதா ...!
இந்த வார்த்தை என் மனதில் பல நாட்கள் பதியம் போட்டு பழகிய வார்த்தை...!
ஒரு புத்தகம் படித்தேன்...!
அந்த புத்தகத்தை வெறுமனே நான் புரட்டவில்லை...!
அந்த புத்தகம் தான் என்னை புரட்டி விட்டது...!
வெற்றுப் படகு...! ( AN EMPTY BOAT )
என்ற அந்த புத்தகத்தில் ஓஷோ அவர்களால்...! குறிப்பிடப்பட்ட வார்த்தை...!
நிமித்த....!
"நாம் வெறும் கருவி மட்டுமே...!
நம்மால் ஆகுவன ஏதும் இல்லை...!
நாம் வெறும் நிமிதா மட்டுமே..!"
என்ற அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன..!
we are just a tool only...! The written is proceeding you and the rope is in almighty's hands...!
இந்த வார்த்தைகள் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை..!
ஆனால் குறைந்த பட்சம் உணர முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற அவா உணர்ச்சியில் உதிர்ந்த உன்னத சிந்தனை தான் நிமிதா ...!